Sorry வேண்டாம்! நீதி வேண்டும்! கருப்பு உடையில் மிரட்டிய விஜய்!
AjithKumar Sivaganga custodial death Tamilaga Vettri Kazhagam protest
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி கோரி, சென்னை சிவானந்த சாலையில் இன்று தமிழக வெற்றிக்கழகம் (த.வெ.க.) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
த.வெ.க. தலைவர் விஜய் கருப்பு உடையுடன் நேரில் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டம், அவர் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு முதன்முறையாகக் களத்தில் வந்த நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து வந்த கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர். 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விஜய் கையில் ஏந்திய பலகையில், Sorry வேண்டாம் நீதி வேண்டும் என்று எழுதப்பட்டு இருந்தது.
English Summary
AjithKumar Sivaganga custodial death Tamilaga Vettri Kazhagam protest