சரத் பவாரை சந்தித்த அஜித் பவார் ஆதரவு எம்எல்ஏக்கள்! மகாராஷ்டிர அரசியலில் மீண்டும் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து தனது ஆதரவாளர்களுடன் விலகிய அஜித் பவார் மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாஜக கூட்டணியில் இணைந்தார். இதனை தொடர்ந்து அவருக்கு மகராஷ்டிரா மாநில துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. மேலும் அவருடைய ஆதரவாளர்கள் 8 பேருக்கு மகாராஷ்டிரா அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டது. 

மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தால் தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து அனைவரையும் நீக்குவதாக சரத் பவர் அறிவித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தங்களுக்கு தான் அதிக எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதாகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சி தங்களுக்கு சொந்தம் எனவும் அஜித் பவர் உரிமை கோரினார்.

இந்த நிலையில் அஜித் பவர் ஆதரவு எம்எல்ஏக்கள் 9 பேர் இன்று திடீரென சரத் பவாரை நேரில் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு வேண்டாம். ஒற்றுமையாக செயல்படலாம் என அஜித் பவார் ஆதரவாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர் 

இந்த சரத் பவார் உடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மூத்த தலைவர் பிரபுல் படேல் "சரத் பவாரிடம் ஆசிர்வாதம் பெறுவதற்காக வந்தோம். தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என அவரிடம் கோரிக்கை வைத்தோம். அதைக் கேட்டுக் கொண்ட அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை" என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ajit Pawar supporting MLAs met Sarath Pawar


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->