தமிழகத்தில் SIR: ஆலோசனையில் திமுக; வரவேற்றுள்ள அதிமுக..!
AIADMK welcomes special voter registration work in Tamil Nadu
பீஹாரைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
குறித்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனை நடத்தி வருகின்ற நிலையில், இப்பணிக்கு அதிமுக வரவேற்பு தெரிவித்துள்ளது.
வரும் நவம்பர் 04-முதல் டிசம்பர் 04 வரை வீடு வீடாக சென்று விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படவுள்ளன. 2026 பிப்ரவரி 07-இல் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளதாக தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்து ஆலோசனை நடாத்தியுளளார். இதில் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெய்சங்கர் இது குறித்து கூறியதாவது: 'வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை அதிமுக முழு மனதுடன் வரவேற்கிறது. இதனை வெளிப்படையாக செய்ய வேண்டும். வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள் அனைத்தையும் சரி செய்ய வேண்டும். தங்களுக்கான தலைவரை தேர்வு செய்ய வாய்ப்பு வழங்க வேண்டும்.'என்று கூறியுள்ளார்.
English Summary
AIADMK welcomes special voter registration work in Tamil Nadu