உங்களுக்கு "ஒட்டு‌ போட வேண்டிய அவசியம்" இல்லை.!! பாஜகவை தாக்கிய அதிமுக தரப்பு.!! - Seithipunal
Seithipunal


அயோதியில் ராமர் கோவில் திறப்புக்கு அதிமுக தரப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அக்கட்சி சார்பில் யாரும் பங்கு பெறவில்லை. எடப்பாடி பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்வீர்களா என கேட்டதற்கு தனக்கு கால் வலி இருப்பதால் கலந்து கொள்வதில் சிரமம் என பதில் அளித்து இருந்தார்.

அதனை பாஜக தரப்பு விமர்சனம் செய்த நிலையில் செய்தியாளர்கள் சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி இடம் ராமர் கோவில் திறப்பு பாஜகவுக்கு வாக்கு வங்கி அதிகரிக்க செய்யுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த இடப்படி பழனிசாமி கோயில் திறப்பதற்கு எல்லாம் மக்கள் வாக்களிப்பார்கள் என்றால் சேலத்தில் அதிமுக அன்ன போஸ்டாக தேர்ந்தெடுக்கப்படும். சேலம் முழுவதும் பல்வேறு கோவில்களை நான் திறந்து உள்ளேன் இன்றும் அந்த கோயில்களில் பூஜைகள் நடைபெற்று வருகிறது.

கோவில் கட்டியவர்களுக்கு எல்லாம் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என பதில் அளித்து இருந்தார். இதனால் அதிமுக தரப்புக்கும் பாஜக திறப்பிற்கும் இடையே கருத்து மோதல் நீடித்து வருகிறது. அதிமுக துணை பொதுச்செயலாளர் கே பி முனுசாமி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்த நிலையில் அதற்கு அண்ணாமலையும் பதிலடி கொடுத்துள்ளார். 

இந்நிலையில் அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் அதிமுக துணை பொதுச் செயலாளர் நத்தம் இரா. விஸ்வநாதன் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அவர் பாஜக மக்களுக்கு என்ன செய்தது? ராமர் கோவிலை கட்டியுள்ளது. அதனால் மக்கள் வாக்களிப்பார்கள் என நம்புகிறார்கள்.

ராமர் கோவில் கட்டியதற்காக பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஒரு மதத்தை முன்னிறுத்தி அரசியல் செய்ய கூடாது"‌ என பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK vishwanathan criticized BJP Ram temple


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->