ஓபிஎஸ் தரப்பு இடம்பெறாத அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு..!! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் கே.எஸ் தென்னரசு அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து அவர் கடைசி நாளான நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் ராமலிங்கம் மற்றும் கூட்டணி கட்சியான தமாகாவின் இளைஞர் அணி தலைவர் யுவராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் 40 பேர் கொண்ட நட்சத்திர பேச்சாளர் பட்டியல் தமிழக தேர்தல் ஆணையரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த பட்டியலுக்கு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரி அனுமதி வழங்கியுள்ளார்.

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, ஈரோடு கிழக்கு தேர்தல் பணிக்குழு தலைவர் செங்கோட்டையன், அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி முனுசாமி, மற்றும் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தன் விஸ்வநாதன், பொன்னையன், தங்கமணி, வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன் உட்பட 40 பேர் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டாலும் நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் ஓபிஎஸ் தரப்பினரின் பெயர்கள் இடம்பெறவில்லை. இதன் மூலம் ஓபிஎஸ் தரப்பை ஈபிஎஸ் அணியினர் முழுமையாக ஓரங்கட்டியுள்ளனர் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK star speakers list released for erode east


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->