ராணுவ வீரர்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ள அதிமுக செல்லூர் ராஜூ..!
AIADMK Sellur Raju has publicly apologized for his controversial remarks about soldiers
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த வாரங்களில் மோதல் போக்கு நிலவியது. பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம், பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது பதிலடி தாக்குதல் நடத்தியது. இதனை தொடர்ந்து பாகிஸ்தான் அத்துமீறி இந்திய ராணுவநிலைகள் மற்றும் பொது மக்கள் இடங்களில் டிரோன் தாக்குதல் நடத்தியது. 04 நாட்களாக நீடித்த போர் பதற்றம் கடந்த 10 ஆம் தேதி பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ளது.
இதற்கிடையே ''ராணுவ வீரர்களா சண்டை போட்டார்கள்..?'' என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார். இந்நிலையில், இதற்கு அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
இந்திய நாட்டை கண்ணை இமை காப்பது போல் பாதுகாத்து வரும் என்னுடைய உயிரினும் மேலான ராணுவ வீரர்களை நான் என்றும் வணங்குபவன் . அவர்களின் தியாகத்தை வணங்குபவன். என்னுடைய செய்தியாளர் சந்திப்பில் தி.மு.க.வின் பேரணி குறித்து கேட்டபோது அது நாடகம்.. அவர்கள் மத்திய அரசையும் பாராட்டாமல் நாடகம் போடுகிறார்கள் என்று சொல்லியதை, தி.மு.க தொலைக்காட்சிகள் என்னுடைய பேச்சை திரித்து போட்டுவிட்டார்கள்.
நான் என்னுடய X வலைதளத்தில் உடனடியாக மறுத்து பதில் போட்டுள்ளேன். ஆனாலும், இராணுவ வீரர்களின் மனம் காயப்பட்டு இருக்கு மேயானால் அதற்காக அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.. என்னுடைய குடும்பம் முன்னால்,இன்னால் இராணுவ வீரர்களின் குடும்பம் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்!!!! என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
AIADMK Sellur Raju has publicly apologized for his controversial remarks about soldiers