கூட்டணியாவது.. கூந்தலாவது! மீண்டும் வராதீர்கள்! பாஜகவை அசிங்கப்படுத்திய அதிமுகவினர்!
AIADMK poster against BJP in Tuticorin
அதிமுக முன்னாள் தலைவர்கள் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அவதூறாக பேசி வந்த நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்தார். இந்த நிலையில் அதிமுக பாஜக நிர்வாகிகளிடையே மீண்டும் போஸ்டர் யுத்தம் தொடங்கியுள்ளது.
குறிப்பாக தூத்துக்குடி மாவட்ட அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞரணி சார்பாக பாஜகவினரை விமர்சித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. குறிப்பாக "அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை! விநாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையார் சுழி போட்டாச்சு! நாளை நமதே நாற்பது நமதே! என்று போஸ்டர் ஒட்டப்பட்டது.

அதேபோன்று மற்றொரு போஸ்டரில் "IPS படிச்சவனை ஆடு மேய்க்க விட்ட இயக்கமல்ல, ஆடு மேய்த்தவனை IPS ஆக்கிய அண்ணா பெயரில் இயங்கும் மாபெரும் மக்கள் இயக்கம்! கூட்டணியாவது.. கூந்தலாவது..! நன்றி! மீண்டும் வராதீர்கள்" என்ற பாஜகவை கடுமையாக விமர்சித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மதுரையில் பாஜக சார்பாக போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. அந்த போஸ்டரில் "ஓரளவுக்கு போச்சுன்னா பேச்சே கிடையாது! வீச்சுச்தான்" என அதிமுகவுக்கு எதிராக பாஜகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
இதற்கு வன்முறை தூண்டும் வகையில் போஸ்டர் ஒட்டி உள்ளதாக கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதேபோன்று கோவை பொள்ளாச்சியில் அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக வெளியேற்றப்பட்டதாக அறிவித்ததற்கு பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
AIADMK poster against BJP in Tuticorin