ஓபிஎஸ் ஒரு செல்லாக்காசு.. அதிமுக-பாஜக கூட்டணி முறிந்தது.. பொன்னையன் அதிரடி..!! - Seithipunal
Seithipunal


சென்னையில் பேரறிஞர் அண்ணாவின் 54ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அண்ணாவின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். 

பின்னர் அதிமுகவின் மூத்த தலைவர் பொன்னையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த அவர்  அதிமுக பாஜக கூட்டணி ஏற்கனவே முறிந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பொன்னையன் பேசியதாவது "அதிமுகவின் அனைத்து தொண்டர்களும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒற்றுமையாக செயல்படுகிறார்கள். தேர்தல் ஆணையத்திற்கு சட்ட ரீதியில் சில கடமைகள் உண்டு.

ஒரு அரசியல் கட்சியில் எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் சட்ட ரீதியில் அதை கண்காணிக்க வேண்டியது நீதிமன்றங்கள் அல்ல, சட்ட ரீதியில் தேர்தல் ஆணையம் தான் உட்கட்சி விவகாரத்தில் முடிவு செய்ய வேண்டும்.

தேர்தல் ஆணையம் அந்தந்த கட்சிகளின் விதிகளுக்கு உட்பட்டு செயல்படுவது தான் தேர்தல் ஆணையத்தின் கடமை. கடமையை தவறி விட்டு இப்பொழுது நீதிமன்றத்தை கை காட்டுவது சட்டத்தை மீறிய செயல். 

அதனை உச்ச நீதிமன்றம் சரி செய்யும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக எல்லாமே நடக்கும். சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை" என பேசினார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர் பாஜக இரு அணிகளையும் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த பொன்னையன் "பாஜக வடநாட்டிலே எப்படிப்பட்ட செயல்பாடுகளை செய்தது, பாஜகவின் நட்பு ஆட்சிகள் எவ்வாறு கவிழ்ந்தது, கவிழ்ந்த ஆட்சிகளை பாஜக எவ்வாறு பிடித்தது என்பது நாட்டு மக்களுக்கும் தெரியும் எங்களுக்கும் தெரியும்.

எனவே பாஜக விவகாரத்தில் நாங்கள் எச்சரிக்கையாக இருக்கிறோம். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணியில் இருந்து விலகி பாஜக தனியாக நின்றது. திமுகவை தவிர எந்த கட்சி கூட்டணிக்கு வந்தாலும் நாங்கள் வரவேற்போம். 

ஓபிஎஸ்-க்கு கட்சியே இல்லை, அவர் ஒரு செல்லாக்காசு. யார் வேண்டுமானாலும் சுயேட்சையாக நின்று விட்டு தனக்கு ஒரு கட்சி இருப்பதாக சொல்லிக் கொள்ளலாம். அதனை மக்கள் இயக்க வேண்டும், சட்டம் ஏற்க வேண்டும்" என கடுமையாக விமர்சனம் செய்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK Ponnaiyan criticized OPS and BJP


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->