தொகுதிப்பட்டியலுடன் சென்ற பாமக... பாஜகவுக்கு எத்தனை?.. பேச்சுவார்த்தை தொடக்கம்.! - Seithipunal
Seithipunal


ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றவுள்ள நிலையில், அதிமுக - பாமக கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தேமுதிக, பாஜகவுடன் கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், மத்திய உள்துறை அமித் ஷாவுடன் பாஜக கூட்டணிக்காக சுமார் 3 மணிநேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

இந்நிலையில், சென்னையில் உள்ள பட்டினம்பாக்கத்தில் உள்ள லீலபெலஸ் நட்சத்திர விடுதியில் அதிமுக - பாமக - பாஜக தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில், அதிமுக தலைமையிடம் பாமக சார்பில் போட்டியிட விரும்பும் 23 தொகுதிகளுக்கான பட்டியல் மற்றும் பாஜக சார்பில் போட்டியிட விரும்பும் பட்டியலை அதிமுகவிடம் வழங்கியுள்ளது. 

பேச்சுவார்த்தை தற்போது தொடங்கியுள்ள நிலையில், பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற இறுதி முடிவு எடுக்க வாய்ப்புள்ளது என தெரியவருகிறது. முன்னதாக தமிழகம் வந்த அமித் ஷா வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதியை அதிமுகவிடம் கேட்டுப்பெறுங்கள் என்று பாஜக நிர்வாகிகளிடம் அறிவுறுத்தியிருந்தார் என்று கூறப்பட்டது.

அந்தந்த கட்சிகளின் சார்பில் தேர்தல் குழுக்கள் லீலா பேலஸிற்கு வருகை தந்துள்ள நிலையில், இறுதி முடிவுகள் இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK PMK BJP DMDK Initiation of block allocation negotiations


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal