நீங்க யார்னு தெரியும்.. சிவகங்கையில் கால் வைக்க முடியாது.. கொந்தளித்த அதிமுக எம்எல்ஏ.!! - Seithipunal
Seithipunal


சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் கார்த்திக் சிதம்பரம் சிவகங்கை கால் வைக்க முடியாது என சிவகங்கை அதிமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன் எச்சரித்துள்ளார்.

அதிமுக நிர்வாகிகளை காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் மிரட்டியதாக எனது குற்றச்சாட்டை அடுத்து அதிமுக எம்எல்ஏ இந்த எச்சரிக்கையை விடுததுள்ளார். 

அதிமுக சார்பில் தமிழக முழுவதும் கண்டா வரச் சொல்லுங்கள் என்ற தலைப்பில் போஸ்டர் ஒட்டியது பேசும் பொருளாக மாறியது. அந்த வகையில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியின் தற்போதைய உறுப்பினரும் வேட்பாளருமான கார்த்திக் சிதம்பரத்தை கண்டவரச் சொல்லுங்கள் என போஸ்டர் ஒட்டியது விவகாரம் தொடர்பாக அதிமுக நிர்வாகிகளை காங்கிரஸார் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சிவங்கையில் நடைபெற்ற அதிமுகவினர் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் கார்த்திக் சிதம்பரம் ஆவணத்தின் உச்சியில் உள்ளார். அதிமுக தொண்டனை மிரட்டும் அளவுக்கு கார்த்திக் சிதம்பரத்திற்கு தைரியம் இருக்குது என்றால் அவர் செலவு கங்கை மாவட்டத்தில் கால் வைக்க முடியாது. 

உன்னுடைய தாய் யார் என மிரட்டுகிறாயே.. உன்னுடைய தாய் தான் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை வாங்கியவர். நீட் தேர்வுக்கு சாதகமாக வாதாடியவர் என கார்த்திக் சிதம்பரத்தின் குடும்பத்தையே விமர்சனம் செய்து உள்ளார் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AIADMK mla senthilnathan waring to Karthik chidambaram


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->