ராஜேந்திர பாலாஜியை தொடர்ந்து அடுத்தடுத்து கைது செய்யப்பட்ட அதிமுகவினர்.. காவல்துறை அதிரடி நடவடிக்கை.!! - Seithipunal
Seithipunal


அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த கே.டி.ராஜேந்திரபாலாஜி, ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக தாகரவீந்திரன் மற்றும் விஜய் நல்லதம்பி ஆகியோர் குற்றஞ்சாட்டினர்.

இதுகுறித்த புகாரின் பேரில் ராஜேந்திர பாலாஜி மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. ராஜேந்திர பாலாஜியுடன் இருந்த என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன் ஆகியோர் மீதும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கிடைக்காததால் தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. காவல்துறையால் தேடப்பட்டு வந்தது. அவர்  பெங்களூரில் பதுங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. நேற்று ராஜேந்திர பாலாஜியை ஓசூரில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் 3 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில், வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டதால், ராஜேந்திர பாலாஜிக்கு ஆதரவாக விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் முன்பு குவிந்த 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் அதிமுகவினரை காவல்துறை கைது செய்தது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aiadmk members arrested


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->