அனைத்துக் குடும்பங்களுக்கும் ரூ. 10,000... அதிமுகவின் அதிரடியான 297 வாக்குறுதிகள்! - Seithipunal
Seithipunal


தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (மார்ச் 24, 2026) சென்னை ராயப்பேட்டை தலைமையகத்தில் 297 முக்கிய அம்சங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

அறிக்கையின் 'மெகா' அம்சங்கள்:
குடும்பங்களுக்கு ஜில் செய்தி: ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா பிரிட்ஜ் (Free Refrigerator) வழங்கப்படும். அத்துடன் அனைத்துக் குடும்பங்களுக்கும் ரூ. 10,000 நேரடி நிதியுதவி வழங்கப்படும்.

மகளிர் நலன்: குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,000 உதவித்தொகை மற்றும் பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க ரூ. 25,000 மானியம் வழங்கப்படும்.

ஆண்களுக்கு இன்ப அதிர்ச்சி: மகளிரைத் தொடர்ந்து, இனி ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும்.

ரேஷன் மற்றும் சிலிண்டர்: ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம்; அட்டைதாரர்களுக்கு மாதம் 1 கிலோ பருப்பு மற்றும் 1 லிட்டர் எண்ணெய் வழங்கப்படும்.

கல்வி மற்றும் முதியோர் நலன்: மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும். முதியோர் ஓய்வூதியம் ரூ. 2,000-ஆக உயர்த்தப்படும்.

"திமுக அரசு மக்களை ஏமாற்றிவிட்டது; அதிமுக சொன்னதைச் செய்யும்" என்று எடப்பாடியார் இந்த அறிக்கையை வெளியிட்டு உரையாற்றினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AIADMK Manifesto 2026 297 Promises Free Fridge for Families Free Bus Travel for Men


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->