2026 க்குள் மத்திய பாஜக ஆட்சி கவிழ்ந்து விடுமாம்; சொல்கிறார் கெஜ்ரிவால்..! - Seithipunal
Seithipunal


டெல்லியின் முன்னாள் முதல்வரும், ஆம்ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் உள்ளிட்ட 21 பேரை டெல்லி மதுபான கொள்கை வழக்கில் இருந்து கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி நீதிமன்றம் விடுவித்துள்ளது.

இதன் பின்னர் கெஜ்ரிவால், பாஜக அரசை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார். குறிப்பாக, மேற்கு ஆசியாவில் நிலவும் போர் சூழலால் சர்வதேசஞ் அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தியாவின் எரிசக்தி மற்றும் பொருளாதாரத்தில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

உலக சந்தையில் நிலவும் இந்த அசாதாரண சூழலால் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவைச் சந்தித்துள்ளது. இதனால், பங்குச்சந்தையிலும் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. இந்த போர் சூழலை முன்கூட்டியே அறிந்திருந்தும் பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க மத்திய பாஜக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கெஜ்ரிவால் குற்றம் சாட்டி வருகிறார்.

இந்நிலையில், நேற்று சிவசேனா (யுபிடி) தலைவர் சஞ்சய் ராவத் எழுதிய புத்தக வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய கெஜ்ரிவால் தெரிவித்துள்ளதாவது:

இந்த 2026-ஆம் ஆண்டுக்குள் மத்தியில் ஆளும் பாஜக அரசு கவிழ்ந்துவிடும். தற்போதைய புவிசார் அரசியல் நெருக்கடி மற்றும் உள்நாட்டு அரசியல் மாற்றங்கள் இதற்கு வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தல்கள் மத்தியில் ஆட்சி மாற்றத்திற்கான தொடக்கமாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சஞ்சய் ராவத் போன்ற தலைவர்களுடன் இணைந்து எதிர்க்கட்சிகள் அனைத்தும் பாஜகவின் பெரும்பான்மைக்கு சவால் விடும் வகையில் ஓரணியில் திரண்டுள்ளன என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால், கெஜ்ரிவாலின் இந்த கருத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், 'எரிசக்தி இறக்குமதியை இந்தியா ஏற்கனவே பல்வகைப்படுத்தியுள்ளது. நாட்டின் உணவு மற்றும் உர கையிருப்பு பாதுகாப்பாக உள்ளது. உலகளாவிய நெருக்கடியைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் மக்களிடையே அச்சத்தை பரப்புகின்றன’' என்று தக்க பதிலடி கொடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kejriwal says the BJP led central government will collapse by 2026


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->