திமுக அமைச்சர்களுக்கு அடுத்த ஆப்பு! இறங்கி அடிக்கும் அதிமுக ஜெயக்குமார்! - Seithipunal
Seithipunal


சொத்து மதிப்பு வழக்கில் வழக்குகளில் இருந்து திமுக அமைச்சர்கள் விடுவிக்கப்பட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேவிஎட் மனு தாக்கல்! 

சொத்து குவிப்பு வழக்கிலிருந்து திமுக அமைச்சர்களான பொன்முடி கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்தும், வீட்டு வசதி வாரியத்தின் வீடு ஒதுக்கியதில் முறைகேடு நடைபெற்ற வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதை எதிர்த்தும் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து மறு விசாரணைக்கு எடுத்துள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த முடிவுக்கு எதிராக திமுக அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் ஐ.பெரியசாமி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால் தனது தரப்பு கருத்தைக் கேட்காமல் எவ்வித உத்தரவும் பிறப்பிக்க கூடாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் திமுக அமைச்சர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தின் மறுவிசாரணைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடினால் அதிமுக தரப்பும் தனது வாதங்களை முன்வைக்க மிகப்பெரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மதுரைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அடுத்தடுத்து திமுக அமைச்சர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடுவார்கள் என்பதால் அவர்களுக்கு செக் வைக்கவும் வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK Jayakumar files caveat petition in SC against DMK ministers


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->