போகாத ஊருக்கு.. "ஏமாற்ற நினைக்கிறார்" உதயநிதி? ரவுண்டு கட்டும் ஜெயக்குமார்.!! - Seithipunal
Seithipunal


திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தற்போதைய விளையாட்டு துறை அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்குறுதி அளித்து பிரச்சாரம் செய்தார்.

அதன்பிறகு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பின் நீட் தேர்வு ரத்து செய்வதற்கான எந்த நடவடிக்கையும் திமுக அரசு மேற்கொள்ளவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதனை தொடர்ந்து திமுக சார்பில் நீட் தேர்வுக்கு எதிராக 50 நாள்களில் 50 லட்சம் கையெழுத்து பெரும் இயக்கத்தை திமுக தொடங்கியது. அந்த இயக்கம் தற்போது என்ன ஆனது என்றே தெரியவில்லை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது சமூக வலைதள பக்கத்தில் "ஆட்சிக்கு வந்து ஆயிரம் நாட்கள்‌ ஆகப் போகிறது! முதல்‌ நாள் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து! இதுவே முதன்மையான தேர்தல் வாக்குறுதி! அந்த முதல் நாளே முதல் கையெழுத்து போடாமல் இன்று ஊர் ஊராக கையெழுத்து வாங்கி கொண்டிருக்கிறார்.

இதில் நானும் கையெழுத்து போட்டு‌ போகாத ஊருக்கு வழி சொல்ல வேண்டுமாம். யாரை ஏமாற்ற நினைக்கிறார் உதயநிதி? மக்களிடம் பொய் சொல்லி அவர்களின் வாக்குகளை வாங்கி அராஜக ஆட்சி நடத்தி கொண்டு இன்னும் நீட் தேர்வு ரத்து என நாடகம் போட்டு மக்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைத்து கொண்டிருக்கிறார் உதயநிதி" என வீடியோ பதிவிட்டு கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

aiadmk jayakumar criticized dmk udhayanithi 07012024


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->