#BigBreaking | அதிமுக தலைமை கழகம் சற்றுமுன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! பொதுச்செயலாளர் பதவி விவகாரத்தில் திடீர் திருப்பம்! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களால் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று, அதிமுக தலைமை கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதிமுக அடிப்படை உறுப்பினர்களால் தான் பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று ஓபிஎஸ் கூறிய நிலையில், அதிமுக தற்போது இப்படியான ஒரு அதிகாரப்பூர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்” என்ற கழக சட்ட திட்ட விதி - 20 (அ): பிரிவு 2ன்படியும்; - கழக சட்ட திட்ட விதி - 20அ; பிரிவு - 1, (a), (b), (c) ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளின்படியும்,

மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும்
தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான
திரு.எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்கள் அனைவராலும் ஒருமனதாக, கழகப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என, தேர்தல் ஆணையாளர்களான, கழக துணைப் பொதுச் செயலாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. நத்தம் இரா. விசுவநாதன், M.L.A., கழக தேர்தல் பிரிவுச் செயலாளரும், திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முனைவர் பொள்ளாச்சி V. ஜெயராமன், M.L.A., ஆகியோரால் இன்று (28.3.2023 - செவ்வாய் கிழமை) அறிவிக்கப்பட்டு, அதற்கான வெற்றிப் படிவத்தை கழகப் பொதுச் செயலாளர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களிடம் வழங்கினார்கள்."

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK Head office announce 28march


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->