வேட்பாளர்கள் பட்டியலுடன் கூடும் அதிமுக பொதுக்குழு.!! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ள நிலையில் அதற்கான பணிகளை அனைத்து கட்சிகளும் ஆரம்பித்துவிட்டன. தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கூட்டணி பேச்ச்ச்சுவார்தை மற்றும் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் காலை ௧௦:35 மணிக்கு நடைபெறுகிறது. 

இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து பல்வேறு முடிவுகள் மற்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. மேலும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிடும் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளதாக அதிமுக வட்டாரம் முணுமுணுக்கின்றன.குறிப்பாக புதிய நபர்களை எதிர்வரும் நாடாளு மன்ற தேர்தலை களமிறக்க திட்டமிட்டு இதற்கான பட்டியலை இன்று மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்க உள்ளானதாவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பாஜக உடனான கூட்டணி முறிவுக்கு பிறகு  சிறுபான்மையினரிடையே அதிமுகவின் செல்வாக்கு கணிசமாக உயர்ந்துள்ளதால் இனி பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இல்லை என்ற முடிவுக்கே எடப்பாடி பழனிசாமி வந்துவிட்டதாக அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கின்றன. இதன்மூலம் இன்று நடைபெறும் அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்வதோடு, முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK General Committee to meet with mp candidates list


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->