#BigBreaking | அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி! வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!
AIADMK GC Election Result
கடந்த ஆண்டு நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், அந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதற்கிடையே அதிமுகவின் பொது செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டதால், அதனையும் எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் வழக்கு தொடர்ந்தனார்.
அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கில் இடைக்கால உத்தரவாக, தேர்தலை நடத்த தடை இல்லை, பொதுக்குழு தீர்மானங்கள் வழக்கு விசாரணையின் தீர்ப்புக்குப் பிறகு பொதுச் செயலாளர் முடிவுகளை வெளியிடலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில், இன்று அதிமுக பொதுகுழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்குகளின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கி உள்ளது.
அதன்படி ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் தொடர்ந்து அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்வதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு முழுவதுமாக எடப்பாடி பழனிசாமி பக்கம் கிடைத்துள்ளதால், அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி போட்டி இன்றி தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்ற அதிகாரப்பூர் அறிவிப்பை, இன்னும் சற்று நேரத்தில் அதிமுக தலைமை கழகம் வெளியிட உள்ளது.

தற்போது அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் குவிந்துள்ள மூத்த தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் தங்களது வாழ்த்துக்களையும், மகிழ்ச்சியையும் அவருக்கு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவின் பொதுச்செயலாளராக என்னை தேர்தடுதற்கு மனமார்ந்த நன்றி என்று தெரிவித்தார்.
இதற்கிடையே உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
English Summary
AIADMK GC Election Result