அதிமுக தலைமை வெளியிட்ட அறிவிப்பு.. முக்கிய நிர்வாகிகளுக்கு அடிக்கப் போகும் அதிர்ஷ்டம்.! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் மாவட்டக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், பொறுப்புகளுக்கான தேர்தல் குறித்து அறிவித்துள்ளது.

இது குறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்ட திட்ட விதிமுறைகளின்படி, PHASE - IV : மாவட்டக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பொறுப்புகளுக்கான தேர்தல்கள் 21.4.2022, 25.4.2022 ஆகிய தேதிகளிலும்; PHASE - V : கழக அமைப்புகள் செயல்பட்டு வரும் பிற மாநிலங்களில் உள்ள கிளை, கொம்யூன் பஞ்சாயத்து, வார்டு, வட்டக் கழக நிர்வாகிகளுக்கான தேர்தல் 23.4.2022 அன்றும், தொகுதி, பகுதி, நகரக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாநிலக் கழக நிர்வாகிகள் பொறுப்புகளுக்கான தேர்தல் 24.4.2022 அன்றும் நடைபெற உள்ளது.

கழக அமைப்புத் தேர்தல்களில் போட்டியிட விரும்பும் கழக உடன்பிறப்புகள் கீழ்க்காணும் விவரப்படி நிர்ணயிக்கப்பட்டுள்ள விருப்ப மனு விண்ணப்பக் கட்டணங்களை, சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு மற்றும் மாநிலங்களுக்கு அறிவிக்கப்படும் தேர்தல் பொறுப்பாளர்களிடம் செலுத்தி, அதற்கான விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

aiadmk election for apr 21 and 25


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->