'காப்பி அடித்து மாட்டிக்கொண்ட மங்குனி ஸ்டாலின்'; திமுக தேர்தல் அறிக்கையை ''Copy Paste'' என விமர்சித்துள்ள அதிமுக..! - Seithipunal
Seithipunal


இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட திமுக தேர்தல் அறிக்கையில், வருமான வரி செலுத்தாத குடும்ப மகளிருக்கு ரூ.8,000 மதிப்புள்ள வீட்டு உபயோக பொருள் கூப்பன், மகளிர் உரிமைத்தொகை ரூ.2000, முதியோர் உதவித்தொகை ரூ.2000, மீன்பிடி நிவாரணத்தொகை ரூ.12,000, ஆதாரவிலை: நெல்லுக்கு ரூ.3,500 கரும்புக்கு ரூ.4,500 உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளமை கவனத்தை ஈர்த்துள்ளது. 

ஆனால் இந்த அறிக்கையை Copy Paste காமெடியன் Power Star என அதிமுக விமர்சனம் செய்துள்ளது. அதாவது, திமுக-வின் இந்த உருட்டு அறிக்கை தேர்தல் களத்தில் Power Star போல ஒரு காமெடியனாக தான் பார்க்கப்படும். இந்த தேர்தலின் ஒரே சூப்பர்ஸ்டார் அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை தான் என தெரிவித்துள்ளது.

இது குறித்து அதிமுக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது;

''காப்பி அடித்து மாட்டிக்கொண்ட மங்குனி ஸ்டாலின்! ஆட்சியில தான் எடப்பாடியின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டினார் என்று பார்த்தால், தேர்தல் அறிக்கையிலும் அதே Copy paste ஸ்டிக்கர் தானா ஸ்டாலின்?

மகளிருக்கு மாதம் ரூ. 2000, அனைவருக்கும் அம்மா வீடு திட்டம், நெல் - கரும்பு ஆகியவைக்கான கொள்முதல் விலை உயர்வு, முதியோர் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர்க்கான உதவித்தொகை உயர்வு, மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை உயர்வு, லேப்டாப் திட்டம், வேளாண், மருத்துவ திட்டங்கள் என அப்படியே Copy Paste செய்து தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளது திமுக.

அரசுப்பணிகளை நீங்கள் 5 ஆண்டுகளில் நிரப்பிய லட்சணத்தை தமிழ்நாடே பார்த்த பிறகும், மீண்டும் அதே உருட்டை உருட்டியது எல்லாம் ஆகச்சிறந்த நகைச்சுவை. 10,000 ரூபாய் பொருளாதார உதவித்தொகை, விலையில்லா Fridge ஆகியவற்றைப் பார்த்து பதறிப்போய், தானும் எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக Gift Card என்ற புதிய உருட்டை உருட்டியுள்ளார்.
திமுக-வின் இந்த உருட்டு அறிக்கை தேர்தல் களத்தில் Power Star போல ஒரு காமெடியனாக தான் பார்க்கப்படும். இந்த தேர்தலின் ஒரே சூப்பர்ஸ்டார் அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை தான்.''எனத் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AIADMK Criticizes DMKs Election Manifesto as a Copy Paste Job


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->