வசூலை வாரிக் குவிக்கும் துரந்தர் 2; வெளிநாடுகளில் பாகுபலி 2 படத்தின் சாதனையை முறியடிப்பு..!
Durandhar 2 Breaks Baahubali 2s Record in Overseas Markets
இந்தியாவில் வசூல் ரீதியில் படங்கள் செய்துள்ள சாதனைகளை துரந்தர் திரைப்படம் முறியடிக்கும் என்பது சினிமா வர்த்தக நிபுணர்களின் கருத்தாக உள்ளது. வெளிநாடுகளில் துரந்தர் 2 திரைப்படம் வசூலை அள்ளிக் குவித்து வரும் நிலையில், அந்த திரைப்படம் பாகுபலி படத்தின் சாதனையை முறியடித்து இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
கடந்த ஆண்டு இறுதியில் வெளிவந்த துரந்தர் முதல் பாகம் உலக அளவில் மிகப் பெரும் வரவேற்பை பெற்று, சுமார் 1350 கோடி ரூபாய் வரையில் தியேட்டர் ரிலீஸில் வசூலித்தது.
அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 19-ஆம் தேதி துரந்தர் 2 தி ரிவென்ஜ் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதல் பாகத்தைப் போன்று இரண்டாவது பாகம் அதிக விறுவிறுப்பும் சண்டைக் காட்சிகள் நிறைந்த திருப்பங்களாக இருந்ததாக ரசிகர்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தற்போது அனைத்து மொழிகளிலும் துரந்தர் -02 வசூலைக் குவித்து வருகிறது. சுமார் 04 மணி நேரம் இந்த படம் ஓடினாலும் எந்த இடத்திலும் ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தவில்லை என்று சினிமா விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் வசூல் ரீதியில் படங்கள் செய்துள்ள சாதனைகளை துரந்தர் திரைப்படம் முறியடிக்கும் என்பது சினிமா வர்த்தக நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். தற்போது அமெரிக்காவில் பாகுபலி 02 திரைப்படம் செய்த வசூல் சாதனையை துரந்தர் 02 முறியடித்து இருப்பதாக தகவல்கள் வெளி வந்துள்ளன.
அதாவது பாகுபலி 2 திரைப்படம் 22 மில்லியன் டாலர் வரையில் வசூலித்திருந்தது. ஆனால், பத்து நாட்கள் முடிவில் துரந்தர் திரைப்படம் 26 மில்லியன் வரை வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
English Summary
Durandhar 2 Breaks Baahubali 2s Record in Overseas Markets