தினசரி ஷாம்பு பழக்கம்… கூந்தலுக்கு நல்லதா கெட்டதா....? - நிபுணர்கள் சொல்லும் ரகசியம் தெரியுமா...?
Daily shampooing habit it good or bad for hair Do you know secret that experts tell
தலைமுடி பராமரிப்பில் இன்று பெரும்பாலானோரின் நம்பிக்கையான துணையாக இருப்பது ஷாம்பு. தினமும் குளிக்கும் போது தவறாமல் ஷாம்பு பயன்படுத்தும் பழக்கமும் பலருக்கு உள்ளது. ஆனால் “தினசரி ஷாம்பு உண்மையில் கூந்தலுக்கு நல்லதா?” என்ற கேள்வி பலரையும் குழப்புகிறது.உச்சந்தலையில் இயற்கையாக உற்பத்தியாகும் ‘சீபம்’ என்ற எண்ணெய், தலைமுடியை ஈரப்பதமாகவும் மென்மையாகவும் வைத்திருக்க உதவுகிறது.

இந்த எண்ணெய் அதிகமாக சுரந்தால் முடி ஒட்டியபடி, எண்ணெய் பசை தோற்றத்துடன் இருக்கும். இப்படிப்பட்டவர்களுக்கு மென்மையான, சல்பேட் இல்லாத ஷாம்புவை அடிக்கடி பயன்படுத்துவது சுத்தத்தையும் சமநிலையையும் பேண உதவும்.உடற்பயிற்சி அதிகமாக செய்வோர், தூசி மற்றும் மாசு நிறைந்த சூழலில் வாழ்பவர்கள், ஹேர் ஜெல் அல்லது ஸ்ப்ரே போன்ற ஸ்டைலிங் பொருட்களை பயன்படுத்துபவர்கள் இவர்களுக்கு தினசரி ஷாம்பு கூந்தலை சுத்தமாகவும் பிரஷ்ஷாகவும் வைத்திருக்க உதவும்.
ஆனால் அளவுக்கு மீறிய ஷாம்பு பயன்படுத்துதல் எதிர்மறை விளைவுகளையும் தரும். அது தலைமுடியின் இயற்கை எண்ணெயை அகற்றி, வறட்சி, முடி உதிர்வு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக ஏற்கனவே வறண்ட தலைமுடி கொண்டவர்களுக்கு இது மேலும் பாதிப்பை அதிகரிக்கக்கூடும்.
மேலும், சில ஷாம்புகளில் உள்ள கடுமையான ரசாயனங்கள் உச்சந்தலையில் எரிச்சலையும் உண்டாக்கும்.எண்ணெய் பசை அதிகமாக இருக்கும் தலைமுடி கொண்டவர்கள் தினமோ அல்லது ஒரு நாள் இடைவெளியோடு ஷாம்பு பயன்படுத்தலாம்.
அதே நேரத்தில் வறண்ட அல்லது சுருள் கூந்தல் கொண்டவர்கள் வாரத்தில் ஒருமுறை அல்லது இரண்டு முறை மட்டுமே ஷாம்பு பயன்படுத்துவது நல்லது. மெல்லிய முடி கொண்டவர்களுக்கு எண்ணெய் விரைவாக படிவதால் தினசரி சுத்தம் அவசியமாகும்; அடர்த்தியான அல்லது கரடுமுரடான கூந்தலுக்கு வாரத்திற்கு ஒருமுறை போதுமானது.
முடியின் தன்மையைப் புரிந்து கொண்டு அதற்கேற்றபடி ஷாம்பு பயன்படுத்துவது தான் உண்மையான கூந்தல் பராமரிப்பு ரகசியம். தினமும் பயன்படுத்தினாலும், இடைவெளியுடன் பயன்படுத்தினாலும் மென்மையான, சல்பேட் இல்லாத ஷாம்புகளைத் தேர்வு செய்வதே ஆரோக்கியமான, பிரகாசமான தலைமுடிக்கான முக்கிய திறவுகோல்.
English Summary
Daily shampooing habit it good or bad for hair Do you know secret that experts tell