அஜித் - வெங்கட் பிரபு கூட்டணியில் மீண்டும் புதிய படம்..!
Another New Film from the Ajith and Venkat Prabhu Duo
வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் மீண்டும் அஜித்குமார் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 'குட் பேட் அக்லி' படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் அஜித்குமார் நடிக்கவுள்ளார். தற்போது கார் ரேசில் பிஸியாக உள்ள அஜித்குமார் விரைவில் ஷூட்டிங்கில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே இயக்குனர் வெங்கட் பிரபு விஜய் நடித்த 'தி கோட்' திரைப்படத்திற்கு பின்னர் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இருப்பினும் சில காரணங்களால் சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபு இணையும் படத்தின் பணிகள் தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அஜித் குமாரை சமீபத்தில் சந்தித்த இயக்குனர் வெங்கட் பிரபு ஆக்சன் திரில்லர் ஜானரில் புதுவிதமான கதையை அஜித்திடம் கூறியதாகவும், அந்தக் கதை அஜித்துக்கு பிடித்துப் போனதாகவும் கூறப்படுகிறது. மங்காத்தா படத்தின் தொடர்ச்சியாக மங்காத்தா 2 படத்தின் கதையையும் வெங்கட் பிரபு அஜித்திடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. விரைவில் இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.
English Summary
Another New Film from the Ajith and Venkat Prabhu Duo