இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் தவெக விஜய்; சிரஞ்சீவியை ஒப்பிட்டு மறைமுகமாக தாக்கிய போஸ் வெங்கட் ..!
Bose Venkat indirectly attacks TVKs Vijay who is contesting in two constituencies by comparing him to Chiranjeevi
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று, மே மாதம் 04 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகளும் அன்றே அறிவிக்கப்படவுள்ளது.
இந்த தேர்தலில் முதல்முறையாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தேர்தலை சந்திக்கவுள்ளது. இந்த தேர்தலில், 02 தொகுதிகளில் விஜய் போட்டியிடுவது சமூக வலைதளங்களில் தற்போது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் விஜய் ஆதரவாளர்கள் அவர் இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெறுவார் என்று கூறி வருகின்றனர்.
இன்று தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அந்த வகையில் கட்சியின் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என 02 தொகுதிகளில் போட்டியிடவுள்ளார். இன்று அறிவிக்கப்பட்ட தமிழக வெற்றி கழகத்தின் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் 23 பேர் பெண்கள் போட்டியிடுகின்றனர்.
இந்த தேர்தலில், 02 தொகுதிகளில் விஜய் போட்டியிடுவது அவர் தோல்வி பயத்தின் காரணமாக இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார் என்று ஒரு சாரார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் நடிகரும் இயக்குனருமான போஸ் வெங்கட் இதுகுறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
அதில், "சிரஞ்சீவி அரசியலுக்கு வந்த போது இரண்டு இடங்களில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். அரசியல் வேறு சினிமா வேறு" என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது விஜய்யை மறைமுகமாக குறிப்பிட்டு போஸ் வெங்கட் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.
English Summary
Bose Venkat indirectly attacks TVKs Vijay who is contesting in two constituencies by comparing him to Chiranjeevi