நாளை அதிமுகவினருக்கு காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி - முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
AIADMK Candidate erode east info
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எப்போது அறிவிக்கப்படுவார் என்ற செய்தியாளரின் கேள்விக்கு, "நாளை மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று காலை தொடங்கிய நிலையில், முதல்நாளில் 5 சுயேச்சை வேட்பாளர்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் நாளை வேட்புமனு தாக்கல் செய்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயத்தில், அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்ற அறிவிப்பு இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்க்கு அவர், "நாளை மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். நாளை காலை தேர்தல் பணிமனை திறப்பு விழா நடைபெற உள்ளது.
ஆளும் திமுகவினர் வாக்காளர்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும் இந்த இடைத்தேர்தலில் அதிமுக வெல்வது உறுதி" என்று தெரிவித்தார்.
English Summary
AIADMK Candidate erode east info