அதிரடி! 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறும்...! - செங்கோட்டையன்
AIADMK alliance win 200 seats 2026 assembly elections Sengottaiyan
ஈரோடில் ஆசனூரில் அ.தி.மு.க. சார்பில் 'மே தின நிகழ்ச்சி' கொண்டாட்டம் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் 'செங்கோட்டையன்' கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது," என்னை பொறுத்தவரை கட்சியில் தொண்டனாக இருந்து பணியாற்ற தயாராக இருக்கிறேன். இந்த இயக்கம் மண்ணிலே வளர வேண்டும்.
இயக்கத்தில் இருப்பவர்கள் ஆட்சியில் இருக்க வேண்டும். அப்போது தான் நமது கண்ணீர் துடைக்கப்படும். வேலைவாய்ப்பு திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
தொழிலாளர்கள் நலன் காக்கப்படும். விவசாயிகள் நலன் காக்கப்படும்.2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறும்" எனத் தெரிவித்தார்.இது தற்போது அரசியல் ஆர்வலர்களிடம் பேசு பொருளாக மாறியுள்ளது.
English Summary
AIADMK alliance win 200 seats 2026 assembly elections Sengottaiyan