வெட்கம்! தொகுதிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நினைவு கூட வேளாண் அமைச்சருக்கு இல்லை! - இபிஎஸ் தாக்கு
Agriculture Minister doesnt even remember to do anything constituency EPS attack
கடலூரில் சிதம்பரத்தில் விவசாய பிரதிநிதிகளுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான ''எடப்பாடி பழனிசாமி'' சந்தித்து உரையாடினார்.

எடப்பாடி பழனிசாமி:
அதன்பிறகு எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்ததாவது," அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.12,000 கோடிக்கு மேல் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் பல பிரச்சனைகளுக்கு மத்தியிலும் விவசாயிகளுக்கு தேவையான நலத்திட்டங்களை செய்து வந்தோம்.
கலப்பின பசுக்களை உருவாக்கி விவசாயிகளுக்கு இலவசமாக கொடுக்க திட்டம். அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த பல நல்ல திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்திவிட்டது.
தொகுதிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நினைவு கூட வேளாண் அமைச்சருக்கு இல்லை " என்று தெரிவித்துள்ளார்.இது தற்போது பல விமர்சனங்களை பெற்று வருகிறது.
English Summary
Agriculture Minister doesnt even remember to do anything constituency EPS attack