தமிழகத்தில் 2-வது முறையாக இன்று வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல்.! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்குகிறது. முக ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற முழு பட்ஜெட் இன்று நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

நிதியமைச்சர் பழனிவேல்ராஜன் 2022 - 2023 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்து பட்ஜெட்டில் உள்ள அம்சங்களை வாசித்தார். 1 மணி நேரம் 54 நிமிடம் பட்ஜெட் தாக்கல் செய்தார்.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் வேளாண் துறைக்கான முழு பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார்.

தமிழகத்தில் இரண்டாவது முறையாக வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது. வேளாண் சாகுபடி ஊக்குவிக்க விவசாயிகளுக்கு மானியம் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது. 

பாசன கால்வாய்களை தூர்வார அதிக நிதி, காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வாய்ப்புள்ளது. கிராம விவசாயிகளின் விளை பொருட்களை சந்தைப்படுத்தும் முறையை எளிமையாக குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம். நெல் கொள்முதல் மையங்களை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயற்கை வேளாண்மைக்கான இடுபொருள்கள் கிடைப்பதை உறுதி செய்தல் குறித்த அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Agriculture Budget 2022


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->