அடேங்கப்பா., முடிவு ஆகிடுச்சா., கொண்டாட்டத்தில் உடன்பிறப்புகள்.!
AFTER STALIN UDHAY
அண்ணாதுரையின் மறைவுக்குப் பிறகு திமுக தலைவராக கருணாநிதி பொறுப்பேற்றார். கருணாநிதியின் மறைவுக்கு பிறகு அவரின் மகன் ஸ்டாலின் தலைவர் ஆகினார். ஸ்டாலினுக்கு பின் இளைஞரணி செயலாளராக இருக்கும் ஸ்டாலின் மகன் உதயநிதி தான் அடுத்த முதல்வராகவும், திமுகவின் தலைவராகவும் வருவார் என்று, திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன் சிக்னல் கொடுத்துள்ளார்.

கருணாநிதி மகனான மு க ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக பதவிக்கு வந்த போதே, வாரிசு அரசியல் என்ற கடும் விமர்சனத்திற்கு ஆளாது திமுக. ஆனால் அப்போது திமுகவை சேர்ந்தவர்கள், இளமைப்பருவம் முதலே மு க ஸ்டாலின் கட்சிக்காக பணியாற்றினார். அவருக்கு இந்த பதவி உரிதானது என்பது போன்ற விளக்கங்களை கொடுத்து சமாளித்தனர்.
ஆனால் தற்போது இரண்டாவது தலைமுறையாக கருணாநிதியின் பேரன் உதயநிதி இளைஞரணி செயலாளர் பதவி அளிப்பது திமுகவின் குடும்ப அரசியலுக்கு கோடி விளக்கங்கள் கொடுத்தாலும், இந்த விமர்சனங்களை இனி தடுக்கவே முடியாது.
மேலும், வரும் சட்டமன்ற தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவது, கடந்த பாராளுமன்ற தேர்தலின் போதே உறுதியாகிவிட்டது. திமுகவின் தலைமை என்ன சொல்கிறதோ அதைத்தான் கேட்பேன் என்று உதயநிதியும் தேர்தலில் போட்டியிடுவதற்கான சம்மதத்தை தெரிவித்து விட்டார்.

இந்த நிலையில், முக ஸ்டாலினுக்கு அடுத்து உதயநிதி தான் முதலமைச்சர் என்று அறிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற திமுகவின் ஒரு நிகழ்ச்சியில் பேசிய துரைமுருகன், நான் கலைஞர் அமைச்சரவையிலும் இருந்தேன், முக ஸ்டாலின் அமைச்சரவையிலும் இருப்பேன், உதயநிதி அமைச்சரவையிலும் பங்குபெறுவேன் என்று பேசியுள்ளார்.
மன்னர் கால ஆட்சியில் தந்தைக்கு பின் மகனுக்குத்தான் அரியாசனம் என்பது போல்., கருணாநிதி திமுகவின் மன்னர் தானே என்று உடன்பிறப்புகள் டிவிட் தட்ட., அட கொடுமையே என்று தமிழகம் தலையில் அடித்து கொள்கிறது.
ஆக., இதுக்கு மேல என்ன சொல்வது.,
ஏதாவது சொல்லிட்டு போங்க.,
அரசியல்ல இதெல்லாம் சாதாரணப்பா.,