நேரம் குறித்த ஓபிஎஸ்., இபிஎஸ்.,! இன்று மாலை இறுதியாகும் தொகுதி உடன்படிக்கை.!  
                                    
                                    
                                   ADMK TMC today evening meet 
 
                                 
                               
                                
                                      
                                            நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக தங்களது தேர்தல் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுடன், அதிமுகவின் தலைமைப் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகளில் ஒதுக்கப்பட்டு, தொகுதி பங்கீடு ஒப்பந்தம் ஆகி உள்ளது.

இதேபோல் பாஜகவுடன் அதிமுக தொகுதி பங்கீடு குறித்து இரண்டு கட்டங்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. மேலும் தேமுதிக வுடன் அதிமுக முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி முடித்துள்ளது. இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக அமையவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய நீதிக்கட்சியின் கட்சி ஆறு தொகுதிகளை கேட்டு உள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஏசி சண்முகம் தெரிவித்துள்ளார். மேலும் சட்டமன்ற தேர்தலில் எத்தனை தொகுதிகள் கொடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்வோம் என்றும், நாங்கள் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிட உள்ளோம் என்றும் ஏசி சண்முகம் அதிரடியாக தெரிவித்து உள்ளார்.
இதேபோல், அகில இந்திய மூவேந்தர் முன்னணியும் அதிமுக கூட்டணியில் இரட்டை இல்லை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த கட்சி 3 தொகுதிகளை அதிமுகவிடம் கேட்டுள்ளது.

இந்நிலையில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் அதிமுக இன்று மாலை 6 மணிக்கு தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளது. இதில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என்றும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் வேண்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
                                     
                                 
                   
                       English Summary
                       ADMK TMC today evening meet