இதான் உண்மையான பேக்கரி டீலிங்! கனிமொழி எம்பி பதவி! பின் வாசல் வழியாக... அதிமுக நிர்வாகி பதிலடி! - Seithipunal
Seithipunal


அதிமுக மாணவர் அணி தலைவர் ராமசந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "புரட்சித்தலைவி அம்மா அவர்கள் போட்ட வழக்கில் நீட் தேர்வை ரத்து செய்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து 2013 ஆகஸ்ட் மாதம் மன்மோகன் சிங் அரசு மேல்முறையீடு செய்தது,

2013 மார்ச் மாதம் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகியதாக சொன்ன திமுக, ஜூன் மாதம் கனிமொழிக்கு ராஜ்யசபா எம்பி பதவிக்காக பின் வாசல் வழியாக காங்கிரசிடம் ஆதரவு கேட்டு பதவி வாங்கியது,

நீட் மேல் முறையீட்டை எல்லாம் அப்போது கண்டுகொள்ளவில்லை, 

இதற்கு பெயர் தான் உண்மையான பேக்கரி டீலிங்!

காங்கிரசின் நளினி சிதம்பரம் நீட் தேர்வுக்கு ஆதரவாக வாதாடியதற்கு பெயர் என்ன டீலிங்? 

அரசு போக்குவரத்துக் கழகத்தை முடக்கி, தனியார் மினி பஸ்கள், தனியார் வாடகை ஸ்லீப்பர் பஸ், தனியார் ஒப்பந்த ஓட்டுநர்கள், தனியார் EV பராமரிப்பு, பேருந்து நிலையப் பராமரிப்பு, தனியார் வாடகை பேருந்துகள் என தனியாருடன் டீலிங் போட்டு விற்கும் தனியார் அமைச்சரான சிவசங்கருக்கு 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை பற்றி பேச அருகதையே இல்லை" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK Singai Ramachandran reply to CM Stalin DMK Kanimozhi NEET


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->