இதை நான் ஏர்பார்கவே இல்லை... இபிஎஸ் அதிரடியால் நிலைகுலைந்த செங்கோட்டையன்!
ADMK Sengottaiyan vs Edappadi Palaniswami
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பிறகும், பிரிந்து கிடக்கும் அணிகளை ஒருங்கிணைக்கும் தனது பணி தொடரும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: அ.தி.மு.க. தொண்டர்களின் உணர்வுகளை தான் வெளிப்படுத்தினேன். சில நிர்வாகிகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அதே கருத்தையே பகிர்ந்தனர். என்னை கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்குவதற்கு முன்பு குறைந்தபட்சம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். எந்த விவாதமும் நடத்தாமல் ஒருதலைப்பட்சமாக நீக்கப்பட்டேன். இப்படியாக நீக்குவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.
கட்சியில் காலில் விழுகிறோம் எனக் கூறியவர்களையே புறக்கணித்து விட்டனர். என்னை நீக்கியது பாதிப்பை ஏற்படுத்துமா என்பதை காலமே சொல்லும். நான் முன்வைத்த கருத்து கட்சி நலனுக்காகவும், மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காகவும் தான். ஒன்றிணைந்தால் சட்டமன்ற தேர்தலில் எளிதாக வெற்றி பெறலாம் என தொண்டர்கள் நம்புகிறார்கள். அப்படி நினைக்கும் தொண்டர்களின் உணர்வை யார் வெளிப்படுத்துவது? என அவர் கேள்வி எழுப்பினார்.
இதேவேளை, செங்கோட்டையன் நீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது முதல், அவரது ஆதரவாளர்கள் கோபிசெட்டிபாளையத்தில் கூடிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
English Summary
ADMK Sengottaiyan vs Edappadi Palaniswami