"நாங்கள் மட சாம்பிராணியா இருக்கோம்" ஆட்சியரிடம் மனம் குமுறிய செல்லூர் ராஜூ!
ADMk Selur raju SIR Madurai
மதுரை மேற்குத் தொகுதியில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் (SIR) ஆளுங்கட்சிக்குச் சாதகமாக நடப்பதாகவும், பணிகள் குறித்த விவரங்கள் யாருக்கும் தெரியவில்லை என்றும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து ஆட்சியரிடம் புகார் அளித்த பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாங்கள் மட சாம்பிராணியாக இருக்கிறோம், ஒன்றுமே புரியவில்லை" என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
முக்கியப் புகார்
SIR பணிகளுக்குத் தகுதியான 40% பி.எல்.ஓ. பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. எழுதப் படிக்கத் தெரியாத சத்துணவு ஆயாக்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் கடமைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
இப்பணியில் உள்ள ஊழியர்களிடம் SIR பற்றி கேட்டால், "எங்களுக்கே எதுவும் தெரியவில்லை" என விவரமில்லாமல் பேசுகிறார்கள்.
விண்ணப்பங்கள் குறைபாடு: விண்ணப்பங்கள் நேரடியாகப் பொதுமக்களிடம் வழங்கப்படவில்லை. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களில் 35 முதல் 40% மட்டுமே திரும்பி வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவை என்ன ஆனது என்று தெரியவில்லை.
ஆட்சியரின் அலட்சியம்: முகாம்கள் தொடங்கிய நாள் முதல் புகார் அளித்தாலும், ஆட்சியர் பிரவீன்குமார், "ஆட்கள் இல்லை, சர்வர் பிரச்சினை, சரியாகத்தான் நடக்கிறது" என்று சமாளிப்பதாகவும், அலட்சியமாக இருப்பதாகவும் ராஜூ குற்றம்சாட்டினார்.
அச்சம் "இறந்தவர்கள் பெயர் நீக்கப்பட வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் நோக்கம் சிதையும் அளவிற்கு, வாக்குரிமை இருக்கிறவர்களின் பெயர்கூட இல்லாமல் போய்விடுமோ" என்ற அச்சம் எங்களுக்கு வந்துவிட்டது என்றும் அவர் தெரிவித்தார். பயிற்சியே கொடுக்காமல் ஊழியர்கள் அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் அவர் சாடினார்.
English Summary
ADMk Selur raju SIR Madurai