கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படை, செந்தில் பாலாஜி தம்பியை பிடிக்க முடியலையா? - செல்லூர் ராஜு பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


ஒரு நடிகையை பிடிக்க, இரண்டு தனிப்படைகள் அமைத்து காவல்துறை தேடி பிடிக்கிறது. ஆனால், செந்தில் பாலாஜியின் தம்பியை பிடிக்க முடியவில்லை என்று, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ தெரிவித்தாவது, "திமுக அரசியலில் பேசாத பேச்சா, அந்த நடிகையும் பேசியுள்ளார். அனைவரும் பேசுவதைப் போல் அவர் பேசினார், ஆனால் அந்த விஷயத்திற்குள் நான் செல்லவில்லை.

அந்த நடிகைக்கு 12 வயது, ஆட்டிசம் பாதிப்புள்ள மகன் உள்ளார். அவர்தான் முழுவதுமாக மகனை கவனித்து வருகிறார்.அந்த நடிகையை பிடிக்க, காவல்துறை இரண்டு தனிப்படைகள் அமைத்து தேடி பிடிக்கிறது.

ஒரு நடிகைக்காக காவல்துறை இவ்வளவு தூரம் இறங்கி வேலை செய்யும் நிலையில், ஒரு வருடமாக சிறையில் இருந்த செந்தில் பாலாஜியின் தம்பியை இன்னும் கைது செய்ய முடியவில்லை. முதல்வர் மு.க. ஸ்டாலினின் கீழ் இருக்கும் காவல்துறையை இதற்கு மேல் என்ன சொல்ல முடியும்?

மக்கள் திமுக அரசை மாற்ற வேண்டிய முடிவில் இருக்கிறார்கள், 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணியை மக்கள் தோற்கடிப்பார்கள் என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK Sellur Raju say about DMK and TN Police


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->