#BigBreaking | அதிமுக இரட்டை இலை முடக்ககோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்து திமுகவுக்கு ஆதரவாகவும், டிடிவி தினகரன், சசிகலாவுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வந்த காரணத்தினால், அதிமுக வலுவிழந்து வருவதாக எண்ணி, எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவை சேர்ந்த 90% பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றை தலைமை வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர்.

இதனை தொடர்ந்து ஓபிஎஸ்-க்கு தங்களது முடிவுக்கு குறித்து தெரிவித்துள்ளனர். இதற்கு ஓபிஎஸ் உடன்பட்டு வராத காரணத்தினால், அதிமுகவின் பொதுக்குழுவைக் கூட்டி ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமியை பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்தனர்.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தொடர்ந்து வழக்கில், நேற்று தீர்ப்பு வெளியாக்கியது. தீர்ப்பின்படி, அதிமுகவில் ஒற்றை தலைமை, இடைக்கால பொதுச் செயலாளர் பதவிகள் எதுவும் கிடையாது. ஏற்கனவே, அதிமுக ஜூன் 23ஆம் தேதிக்கு முன்பு அதிமுக எப்படி இருந்ததோ அப்படியே செயல்படும் என்று தெரிவித்திருந்தார். மேலும், அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை கூட்டவும் அறிவுறுத்தி இருந்தார். 

இதற்கிடையே, அதிமுகவின் உள்கட்சி குழப்பம் காரணமாக இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரி, கட்சியின் முன்னாள் உறுப்பினர் ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை அடுத்து உச்சநீதிமன்றத்தில் ஜோசப் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்நிலையில், உச்ச நீதிமன்றமும் தற்போது அவரின் மனுவை தள்ளுபடி செய்து, சென்னை உயர்நீதிமன்றம் விதித்த 25 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன், கூடுதலாக மேல்முறையீட்டு மனுவுக்காக 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து, மனுவை தள்ளுபடி செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK OPS vs EPS ADMK SIMPLE CASE SC AUG


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->