ஓபிஎஸ் தரப்புக்கு அதிர்ச்சி கொடுத்த எடப்பாடி தரப்பு.! நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்.! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி ஓ பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் திண்டுக்கல் சண்முகம் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு நேற்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "வருகின்ற 11ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை கூட்டலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் வேறு நிவாரணங்களை பெறுவதற்கு உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் தெரிவித்து இருக்கிறது. இந்த வழக்கை விசாரிக்க வேண்டும்" என்றார்.

அப்போது நீதிபதி, வேறு என்ன நிவாரணம் கேட்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர், பொதுக்குழுவுக்கு தடை கேட்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்தார். 

எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் தில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்று கேட்டார்.

அப்போது குறிப்பிட்ட நீதிபதி அவர்கள், வருகின்ற 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி இருப்பதை சுட்டிக்காட்டினார். 

இதனை அடுத்து உச்சநீதிமன்ற உத்தரவை நாளை தாக்கல் செய்வதாகவும், இந்த வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார்.

ஆனால், எடப்பாடி பழனிச்சாமி தரப்பு, உட்கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்று விளக்கி இருப்பதாகவும், இந்த வாழ்க்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் நகல்களை இன்று தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை இன்று பிற்பகல் 2:15 மணிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி தரப்பு பதில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில், கட்சியின் உறுப்பினராக இல்லாத மனுதாரர் அதிமுக பொது குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்த இந்த வழக்கை, தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK OPS ISSUE EPS SIDE IN COURT


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->