விதித்த கெடு முடிகிறது... செங்கோட்டையன் சொல்லப்போகும் நல்ல செய்தி... ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி!
admk ops eps sengottaiyan
செங்கோட்டையன் சமீபத்தில் அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் இணைக்க எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில் அண்ணா பிறந்த நாளில் நாமே முன்வருவோம் என எச்சரித்திருந்தார். இதற்குப் பிறகு அவரது கட்சிப் பதவிகள் நீக்கப்பட்டன.
பின்னர் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த செங்கோட்டையன், அதிமுகவில் பிரிந்தவர்களை மீண்டும் இணைப்பதில் ஆதரவு கிடைத்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், அவர் விதித்த கெடு நாளையுடன் முடிவடைவதால், அதிமுக அரசியலில் அடுத்தடுத்து என்ன மாற்றங்கள் நிகழும் என்ற பரபரப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தனது அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார்.
அவர் கூறியதாவது: சசிகலாவை கூடிய விரைவில் சந்திப்பேன். ஆனால் சந்திப்பதற்கு முன் உங்களிடம் தெரிவிப்பேன்.
செங்கோட்டையன் விதித்த கெடு நிறைவடையும் நிலையில், அவர் மீண்டும் நல்ல செய்தி சொல்லுவார் என நம்புகிறேன். விஜய் உடன் கூட்டணி குறித்த கேள்விக்கு, ஏற்கனவே பதில் அளித்துள்ளேன். எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம், அது நல்லவிதமாகவே அமையும்.
எனக்கு டெல்லி செல்லும் எண்ணமே இல்லை. நயினார் நாகேந்திரன் இரண்டு நாட்களுக்கு முன்பு தொலைபேசியில் பேசினார். அவரை சந்திக்க வேண்டுமென கூறினார். உறுதியாக சந்திப்பேன் என்று சொல்லியுள்ளேன் என்றார்.
டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி மாற்றப்பட்டால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவேன் என கூறியது குறித்து, அது அவரிடம் கேட்கப்பட வேண்டிய கேள்வி என்று பன்னீர்செல்வம் பதிலளித்தார்.
English Summary
admk ops eps sengottaiyan