#BigBreaking || அதிமுக பொதுக்குழு - சற்றுமுன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர்.!
admk meeting issue chennai hc appeal june 2022
அதிமுகவில் ஒற்றை தலைமைப் விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், வருகிற 23-ஆம் தேதி அக்கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், வரும் 23-ஆம் தேதி நடக்க உள்ள அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக செயலாளருமான பெஞ்சமின் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். அதில்,
"வருகின்ற 23 ஆம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், முன்னாள் சட்டமன்ற- பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
சுமார் 2500 பேர் இந்த பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இதன் காரணமாக உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள இடத்தில் போக்குவரத்தை முறைப்படுத்த வேண்டும் என்றும் தமிழக டிஜிபி க்கு, ஆவடி காவல்துறை ஆணையருக்கு மனு அளித்தேன்.

ஆனால் இந்த மனு மீதான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 15ஆம் தேதி மனு அளித்த நிலையில் இதுவரை எந்த எடுக்காததால், பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்குவதற்கு கால தாமதம் நடந்து வருகிறது.
பொதுக்குழு கூட்டத்திற்கு இன்னும் ஓரிரு தினங்களில் மட்டுமே உள்ள நிலையில், இந்த பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்காக காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அது குறித்து நாங்கள் அளித்துள்ள மனுவை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் முறையிடப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை வருகிற புதன்கிழமை விசாரிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
English Summary
admk meeting issue chennai hc appeal june 2022