பொதுக்குழு தடை வழக்கில்.. நீதிபதி எடுத்த திடீர் முடிவு.! காத்திருப்பில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள்,! - Seithipunal
Seithipunal



அதிமுகவின் பொது குழுவுக்கு தடை கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது அப்போது, அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள இருபத்திமூன்று தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளித்து விட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ பன்னீர்செல்வம் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த இருபத்தி மூன்று தீர்மானங்களை தவிர, வேறு எந்த ஒரு தீர்மானத்தையும் அனுமதிக்க முடியாது என்றும் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது கட்சி விதிகளுக்கு முரணாக ஓபிஎஸ் செயல்பட மாட்டார் என்று, அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளார்.

இதேபோல், எடப்பாடி கே பழனிசாமி தரப்பில், பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்ட வலியுறுத்தி இருப்பதாகவும், பொதுக்குழுவை இருவரும் இணைந்து கூட்ட முடியும் என்றும், பொதுக்குழு முடிவுகள் கட்சியினரை கட்டுப்படுத்தும் எனவும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுக்குழு தான் கட்சியின் உச்சபட்ச அமைப்பு என்றும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அல்ல என்றும் எடப்பாடி கே பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.திருத்தம் என்பது 2665 பொதுக்குழு உறுப்பினர்களின் விருப்பம் என்றும், நாளை திருத்தங்கள் நடக்கலாம், நடக்காமலும் இருக்கலாம், பொதுக் குழுவில் உள்ள உறுப்பினர்களின் விருப்பம் அது என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுக்குழுவில் பெரும்பான்மையான உறுப்பினர்களின் விருப்பத்தின்படி தீர்மானம் விதிக்கப்படும். இதுவே ஜனநாயகம் எனவும் எடப்பாடி கே பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முந்தைய ஆண்டுகளில் நடத்தப்பட்ட பொது குழுக்களில் தொடர்பான நோட்டீஸ்களில் அஜெண்டா ஏதும் குறிப்பிடப்படவில்லை என்றும் எடப்பாடி கே பழனிசாமி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.

எந்த உறுப்பினரும் பொதுக்குழு கூட்டத்தில் குரல் எழுப்பலாம் என்பதற்கான விதிகளை காட்டுங்கள் என ஓபிஎஸ் தரப்பு கேள்வி எழுப்பியது.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இடைக்கால உத்தரவை பிறப்பிக்க உள்ளதாக தெரிவித்தார். பின்னர் அந்த உத்தரவை சிறிது நேரம் தள்ளிவைப்பதாக தெரிவித்துள்ளார்.

இன்னும் சிறுது நேரத்தில் நாளை பொதுக்குழு நடக்குமா? நடக்காதா? நீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதிக்கும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

admk meet chennai hc judge ops eps


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->