"தவெக ஒரு கலப்படக் கட்சி; விஜய் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்": அதிமுக முன்னாள் அமைச்சர் எச்சரிக்கை!
admk kp munusamy tvk vijay
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் நடைபெற்ற அதிமுக இணைப்பு விழாவில் பங்கேற்ற அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் "தூய கட்சி" என்ற கருத்தைக் கடுமையாகச் சாடினார்.
"சந்தர்ப்பவாதிகளின் புகலிடம்":
"தவெக தூய கட்சி என விஜய் கூறுவது எதார்த்தத்திற்குப் புறம்பானது. உங்கள் செயல்பாடுகள் என்ன, ஆட்சிக்கு வந்தால் என்ன திட்டங்களை வைத்திருக்கிறீர்கள் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், உங்கள் கட்சியில் இப்போது இருப்பவர்கள் அனைவரும் பதவிக்காகவும், வசதிக்காகவும் மற்ற கட்சிகளில் இருந்து ஓடி வந்த சந்தர்ப்பவாதிகள்," என முனுசாமி விமர்சித்தார்.
செங்கோட்டையன் மீது சாடல்:
குறிப்பாக, அதிமுகவில் 53 ஆண்டுகள் இருந்து அனைத்துப் பதவிகளையும் அனுபவித்த செங்கோட்டையன் போன்றவர்கள் இப்போது விஜய்யுடன் இணைந்திருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர்:
"அதிமுகவில் 'புரட்சித் தலைவர்' என்றவர்கள், இப்போது அங்குப் போய் 'புரட்சித் தளபதி' என்கிறார்கள்."
"எந்தப் பக்கம் வாய்ப்பு கிடைக்கும் என்று சுற்றும் இந்தக் கூட்டத்திடம் விஜய் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தவெக என்பது தூய கட்சி அல்ல, அது ஒரு கலப்படக் கட்சி," என்று அவர் அதிரடியாகத் தெரிவித்தார்.
விஜய்யின் அரசியல் வருகையைத் தொடர்ந்து, அதிமுக மற்றும் தவெக இடையே நிலவி வரும் வார்த்தைப் போர் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
admk kp munusamy tvk vijay