மொத்தத்தில் டாஸ்மாக் வருமானத்தில் DAWN PICTURES! உதயநிதி வீடியோவை வெளியிட்ட ஜெயக்குமார்!
ADMK Jayakumar TASMAC Scam Udhay
டாஸ்மாக் நிதி மோசத்தி வழக்கில் அமலாக்கத்துறையின் விசாரணை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
குறிப்பாக டாஸ்மாக் முறைகேடு பணம் சினிமா தயாரிக்க பயன்படுத்தியதாக அமலாக்கத்துறையின் விசாரணை நகர்வுகள் உணர்த்தி வருகின்றன.
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காணொளி ஒன்றை வெளியிட்டு விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தியாகி செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை சோதனையின் போது மருத்துவமனையில் நடத்திய நெஞ்சு வலி நாடகத்தை காண்பதற்கு சென்றார் துணை முதலமைச்சர் உதயநிதி.
கையோடு ஆகாஷ் பாஸ்கரனை உள்ளே அழைத்துச் சென்றது ஏன்?
பத்து ரூபாய் பாலாஜிக்கும் பராசக்தி தயாரிப்பாளருக்கும் என்ன தொடர்பு?
உதயநிதி ஆகாஷ் பாஸ்கரனை தேடி தேடி அழைத்துச் மருத்துவமனைக்குள் செல்வது எதற்கு?
மொத்தத்தில் TASMAC வருமானத்தில் DAWN PICTURES இயங்கியது என்பது வெட்ட வெளிச்சமாகிறது" என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
English Summary
ADMK Jayakumar TASMAC Scam Udhay