திருமாவளவனால் திமுக பயத்தில் உள்ளது - அதிமுக முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


திருமாளவனால் திமுக பயத்தில் உள்ளதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் தெரிவிக்கையில், "திமுக கூட்டணியில்  இருக்கக்கூடிய கட்சிகள் நீரில் பூத்த நெருப்பு போல இருந்து வருகிறது.

தற்போது விசிக திருமாளவன் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு கேட்டு பேசி இருக்கிறார். இது திமுகவிற்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை சிறுத்தை கட்சியின் மது ஒழிப்பு மாநாடு பொது நோக்கத்தோடு நடத்தப்பட உள்ளது. இந்த மாநாட்டில் எங்கள் கட்சியின் தலைமையை நேரடியாக சந்தித்தோ அல்லது கடிதம் மூலமாக அழைப்பு விடுத்தால் இந்த மாநாட்டில் கலந்து கொள்வது குறித்து முடிவு எடுப்போம்.

பேரஞ்சர் அண்ணாவின் பிறந்தநாளை கொண்ட திமுகவுக்கு எந்த தகுதியும் இல்லை. திமுகவின் இந்த மூன்றாண்டு ஆட்சிக்காலத்தில் அண்ணாவின் பெயரில் ஒரு திட்டத்தை கூட அவர்கள் கொண்டு வரவில்லை. கொண்டு வந்த திட்டங்கள் எதற்கும் அண்ணாவின் பெயரை வைக்கவில்லை. தற்போது அவர்கள் கருணாநிதியின் புகழை தான் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆர்எஸ்எஸ்-ன் கிளை இயக்கம் போல் திமுக தற்போது மாறிவிட்டது. அண்ணாவை இழிவு படுத்திய பாஜகவின் தலைவர்களை அழைத்து வந்து அரசு விழாக்களில் பங்கேற்க செய்து உள்ளார்கள்.

கடந்த மூன்று ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் முதல்வர் முக ஸ்டாலின் கொண்டு வந்த தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

அவர் உண்மையிலேயே வெளிநாடுகளுக்கு முதலீடுகளை ஈர்க்கச் சென்றாரா? இல்லை இவர் முதலீடு செய்ய வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொண்டாரா? என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளதாக ஜெயக்குமார் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Jayakumar Say About Thirumavalavan VCK DMK MKStalin


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->