அங்கீகாரம் இல்லை என்ற ஏமாற்றம்… கட்சி மாறிய ஆதவ் அர்ஜுனாவின் மாமியார்...!
Disappointed by lack recognition Adhav Arjuna mother in law who changed parties
அண்மைக்காலம் வரை இந்திய ஜனநாயகக் கட்சி மாநில இணைப் பொதுச் செயலாளராகச் செயல்பட்ட, லாட்டரி தொழிலதிபர் மார்ட்டினின் மனைவியும், தவெகவின் முக்கிய நிர்வாகி 'ஆதவ் அர்ஜுனா'வின் மாமியாருமான 'லீமா ரோஸ்' திடீரெனக் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேலும், கடந்த 14 ஆண்டுகளாக கட்சிக்காக முழுநேரமாக உழைத்தும் தன்னுடைய பங்களிப்பிற்கு உரிய மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்கவில்லை என்றும், சில விரும்பத்தகாத அனுபவங்கள் மனவருத்தத்தை ஏற்படுத்தியதால் இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் விளக்கமளித்தார்.
இதையடுத்து அவரை தங்களது அணியில் இணைக்க அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தரப்பு தீவிர முயற்சி மேற்கொண்டதாக தகவல்கள் வெளியான நிலையில், இன்று அவர் அதிகாரப்பூர்வமாக அக்கட்சியில் இணைந்து புதிய அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் திருவாடானை அல்லது கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், கடந்த டிசம்பரில் அவரது மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதுச்சேரியில் “லட்சிய ஜனநாயக கட்சி” என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக எடப்பாடி கே. பழனிசாமியை சந்தித்தபோது அதிமுகவில் இணையப் போவதாக வெளியான செய்திகள் அனைத்தையும் லீமா ரோஸ் மறுத்திருந்த நிலையில், தற்போது அவரின் இணைவு அரசியல் தரப்புகளில் பல்வேறு விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது.
English Summary
Disappointed by lack recognition Adhav Arjuna mother in law who changed parties