ஆண்மை இருந்தால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தனியாக நில்லுங்கள்.. முட்டி மோதும் அதிமுக-பாஜக.!! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் பள்ளி மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டு, தமிழக பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது, திமுக ஆட்சி காலம் இன்னும் நான்கு ஆண்டுகள் தான் உள்ளது. ஆனால் இந்த நான்கு ஆண்டுகள் அவர்கள் ஆட்சி நீடிக்குமா என்று உறுதியாக சொல்ல முடியாது. அதற்குப் பின்பும் அவர்கள் கட்சியின் நீடிக்காது. 

சட்டமன்றத்தில் ஆளுமையோடு பேசக்கூடிய அதிமுகவை பார்க்க முடியவில்லை. நான்கு பேர் இருந்தாலும் சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சினையை பாஜகதான் பேசுகிறது. அதிமுக எதிர்கட்சியாக இல்லை. எதிர்க்கட்சியாக இல்லாமல் இருந்தாலும் ஊடகங்களுக்கு துணிச்சலோடு பேட்டி அளிப்பவர் அண்ணாமலை மட்டுமே என தெரிவித்துள்ளார். 

நயினார் நாகேந்திரன் இந்த பேச்சு அதிமுக மத்தியில் சலசலப்பையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் கண்டனக் குரல்களும் எழுந்துள்ளது. 

இந்நிலையில், அதிமுக ஐடிவிங்கை சேர்ந்த ராஜ் சத்யன், நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், அண்ணன் நயினார் நாகேந்திரன், நீங்கள் வேண்டுமானால் அதிமுக தோள் மேல் தொத்திக் கொண்டு பெற்ற சட்டமன்ற பதவியை ராஜினாமா செய்து விட்டு , தாங்களாக மீண்டும் வெற்றி பெற்று தங்கள் ஆண்மையை நிருபியுங்களேன் ….??? ஆண்மை என்பது சொல் அல்ல செயல் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

admk it wing members tweet for bjp mla


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->