அதிமுக முன்னாள் எம்எல்ஏ கட்சியிலிருந்து நீக்கம் - காலையிலேயே அதிரவைத்த எடப்பாடி பழனிச்சாமி!
ADMK Ex MLA dismissed in party eps announce
கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி முன்னாள் MLA பல்பாக்கி கிருஷ்ணன் என்பவரை அதிமுகவில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதில், சேலம் புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளர் பல்பாக்கி சி. கிருஷ்ணன், கழகத்தின் கொள்கைகளுக்கு முரணாகவும், கண்ணியத்திற்கு மாசு கற்பிக்கும் வகையிலும் செயல்பட்டதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் நீக்கப்பட்ட இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என இரு கட்சித் தலைமைகளும் அறிவுறுத்தியுள்ளன.
அதிமுக: விருப்ப மனுத் தாக்கல் அவகாசம் நீட்டிப்பு
2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள சட்டமன்றப் பொதுத்தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான கால அவகாசத்தை நீட்டித்து பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
புதிய கால அவகாசம்: 28.12.2025 (ஞாயிறு) முதல் 31.12.2025 (புதன்) வரை.
நேரம்: தினசரி காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை.
இடம்: சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கழகத் தலைமை அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்.
English Summary
ADMK Ex MLA dismissed in party eps announce