#BigBreaking || இப்படி ஒரு திருப்பத்தை ஓபிஎஸ் எதிர்பார்த்து இருக்கவே மாட்டார்., மொத்தமாக வேலையை முடித்த எடப்பாடி.!
admk eps shocking announce
அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி K. பழனிசாமி இன்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில்,
"அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம், சென்னை, ஆழ்வார்பேட்டை, T.T.K. சாலை, கிரவுன் பிளாசா சென்னை அடையார் பார்க் ஹோட்டலில் 17.07.2022 - ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணிக்கு, கழக இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், கழகத்தின் சார்பில், சட்டமன்றக் கட்சித் துணைத் தலைவர் மற்றும் துணைச் செயலாளராகக் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பதவிகளுக்கு, கழக சட்டமன்ற உறுப்பினர்களால் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
எதிர்க்கட்சி துணைத் தலைவர் :
R.B. உதயகுமார், M.L.A., அவர்கள் (196) திருமங்கலம் தொகுதி முன்னாள் அமைச்சர்
எதிர்க்கட்சி துணைச் செயலாளர் :
அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி, M.L.A., அவர்கள் (66) போளூர் தொகுதி முன்னாள் அமைச்சர் " என்று அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும், இது குறித்த பரிந்துரை கடிதத்தை அதிமுகவின் தலைமை கொரடா எஸ் பி வேலுமணி, இன்று தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவை நேரில் சந்தித்து வழங்கி இருக்கிறார்.
ஏற்கனவே ஓ பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகள் குறித்து ஏதேனும் பரிந்துரை கடிதம் வந்தால், அதனை நிராகரிக்க வேண்டும் என்று கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.

மேலும் இந்த கடிதம் பரிசீலையில் உள்ளதாக சபாநாயகர் அப்பாவு, செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்திருந்தார். இப்படியான சூழ்நிலையில், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் மற்றும் துணைச் செயலாளர் பதவிகளுக்கு புதிய பெயர்களை பரிந்துரை செய்து அதிமுகவின் கொறடா கடிதம் வழங்கியிருக்கிறார்.
இது குறித்து சபாநாயகர் என்ன முடிவு எடுப்பார் என்பது விரைவில் தெரியவரும். மேலும் ஓபிஎஸ் தரப்பில் இந்த பரிந்துரை கடிதத்தை நிராகரிக்க வேண்டும் என்று ஒரு கடிதம் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருந்து வரும் ஓபிஎஸ், அதிமுகவின் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அதிமுகவின் பொதுக்குழு நீக்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
admk eps shocking announce