டி.டி.வி.தினகரனை அன்போடு வரவேற்று, வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் - எடப்பாடி பழனிசாமி!
ADMK EPS NDA AMMK TTV
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்று, வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பதிவில், "தீயசக்தி தி.மு.க.-வின் கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்திடவும், வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளியை வைத்திடவும், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்றைய தினம் இணைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய டி.டி.வி.தினகரனை அன்போடு வரவேற்று, அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, தி.மு.க. குடும்ப ஆட்சியின் பிடியில் இருந்து மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்று தெரிவித்துள்ளார்.