காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொள்வதை என்னவென்று சொல்ல? திமுக அரசுக்கு அதிமுக கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


அதிமுக விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "உதவித் தொகை உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய மாற்றுத் திறனாளிகளை கைது செய்ததோடு அல்லாமல், 14 மணி நேரம் பேருந்திலேயே அடைத்து வைத்து அலைக்கழித்துள்ளது ஸ்டாலின் மாடல் திமுக அரசு.

கருணையோடு இருக்க வேண்டிய அரசு, காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொள்வதை என்னவென்று சொல்ல?

அவர்களால் தானாக பேருந்தில் இருந்து இறங்க முடியாது என்பது தெரிந்து, அவர்களை அடைத்து வைத்திருப்பது எவ்வளவு பெரிய சித்திரவதை? எப்படிப்பட்ட ஒரு கொடூர Sadist மனநிலை இருந்தால், திமுக அரசு இப்படி ஒரு செயலை செய்யும்?

பார்வை இழந்து நிற்பது மாற்றுத் திறனாளிகள் அல்ல; கண்ணை மூடிக் கொண்டு காட்டாட்சி நடத்தும் பொம்மை முதல்வரின் விடியா அரசு தான்" என்று தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK EPS Condemn to DMK Govt MK Stalin


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->