#BREAKING | எடப்பாடி பழனிசாமி சிபிஐ வழக்கில், சற்றுமுன் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


தன் மீதான சிபிஐ விசாரணையை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கை நாளை விசாரணை செய்வதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

நெடுஞ்சாலை ஒப்பந்தங்களை உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்கி, சுமார் 4800 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு செய்ததாக,  ஆர் எஸ் பார்வதி பாரதி லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

பின்னர், இந்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி, கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றிய தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரணை செய்த உயர்நீதிமன்றம், இந்த புகார் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தலாம் என்றும், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யவும் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தது.

இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். பல வருடங்களாக இந்த மேல்முறையீட்டு மனு பட்டியலிடப்படாமல் இருந்த நிலையில், நாளை இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK EPS CBI Case Supreme Court Order


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->