ஆட்சியில் பங்கு: காங்கிரஸ்-திமுக கூட்டணி மோதல்..? எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேட்டி!
ADMK Edappadi Palaniswami DMK congress alliance
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. அரசின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அதிமுக ஆட்சி: "அ.தி.மு.க. ஆட்சியில் ஏதாவது குறை சொல்ல முடியுமா? அ.தி.மு.க.தான் தமிழகத்தில் NDA கூட்டணிக்குத் தலைமை எனத் தெளிவாக அறிவிப்பு வந்தது," என்று அவர் குறிப்பிட்டார்.
திட்டங்களை அபகரிப்பு: "அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை, தி.மு.க. அரசு இப்போது ரிப்பன் வெட்டித் திறந்து வைக்கிறது. கோவையில் பல பாலங்களுக்கான திட்டங்களைக் கொண்டு வந்தது அ.தி.மு.க.தான்," என்று அவர் உரிமை கோரினார்.
நிதியற்ற அடிக்கல்: "முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நிதியே ஒதுக்காமலேயே பல புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்," எனப் பழனிசாமி குற்றம்சாட்டினார்.
காங்கிரஸ்-திமுக கூட்டணி மோதல்..?: "காங்கிரஸ் கட்சி, உங்கள் கூட்டணியில் தங்களுக்கு ஆட்சியில் பங்கு வேண்டும் எனக் கோருகிறது. ஆனால், தி.மு.க. மறுப்பு தெரிவிக்கிறது," என்று கூட்டணிக்குள் நிலவும் பிளவுகளைச் சுட்டிக்காட்டினார்.
பொய்யான முதலீடுகள்: "77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டுவிட்டதாகத் தி.மு.க. பொய் சொல்கிறது. அதன் மூலம் 25 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துவிட்டதா?" என்று கேள்வி எழுப்பினார்.
குவாரி மிரட்டல்: குவாரி உரிமையாளர்களை மிரட்டி, அவர்களிடம் ரூ.10 லட்சம் தர வேண்டும் என நிர்பந்தம் செய்வதாககவும் குற்றம் சாட்டினார்.
English Summary
ADMK Edappadi Palaniswami DMK congress alliance